பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தைப் பார்வையிட்ட குடியரசுத் துணைத் தலைவர்

தமிழியல்.காம், சென்னை, 19.01.2020.

தமிழ்நாடு அரசின் மூலமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் 19.01.2020 அன்று பார்வையிட்டார். இக்கூடத்தின் திருவள்ளுவர் அரங்கு, தொல்காப்பியர் அரங்கு, கபிலர் அரங்கு, ஔவையார் அரங்கு, இளங்கோவடிகள் அரங்கு போன்றைப் பார்வையிட்ட துணைக் குடியரசுத் தலைவர் இவற்றிலுள்ள ஓவியங்கள், மரச் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுதை வடிவங்கள், ஒளிப்படங்களையும் கண்டு இரசித்தார். மேலும், தமிழ்த்தாய் ஊடக அரங்கில்  திரையிடப்பட்ட பழந்தமிழர் வாழ்வியல் என்ற தலைப்பிலான ஆவணப் படத்தையும்  பார்த்தார். இவையனைத்தும் தமிழினத்தின் தொன்மையையும், சிறப்பையும் மிகச் சிறப்பாக எடுத்தியம்புவதாக உள்ள என்று  பாராட்டினார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழர்களின் வரலாற்றை நன்கு அறிந்துகொள்ள, இந்தத் தனித்துவமான நிறுவனத்திற்கு அனைவரும் வரவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன். இங்குவரும் ஒவ்வொரு பார்வையாளரும் நிச்சயமாக மனநிறைவோடு திரும்பிச் செல்வார்கள் என்று நம்புகிறேன். அழகிய தமிழ்மொழியைப் பாதுகாத்து, பராமரித்து, மேம்படுத்துவன் மூலம் தேசத்துக்கு இந்த நிறுவனமும், அதன் ஆராய்ச்சியாளர்களும் மகத்தான சேவை புரிந்து வருகிறார்கள் என்றும்,

*இந்தியாவின் தொன்மையான இனங்கள் யாவும் °பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தைப்போல° தங்கள் வேர்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்து, வரும் தலைமுறைக்குக் காட்சிப்படுத்தி வழங்க வேண்டும்* என்று குறிப்பிட்டார்.

மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர், உயர்திரு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், காட்சிக்கூடப் பொறுப்பாளர் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன், பொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Add comment

error: Content is protected !!