தமிழரும் மேலாண்மையும்
சிறப்புரை – முனைவர் ஆ.மணவழகன்
22.03.2024
வடசென்னை பகுதியில் பரந்த வளாகத்தில் அமைந்துள்ளது #பாரதி_மகளிர்_கல்லூரி (தன்னாட்சி).
அப்பகுதி மாணவியர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோரும் இங்குப் பயில்கின்றனர். தமிழியலில் இளங்கலைத் தொடங்கி முனைவர் பட்டம் வரைப் பயில இங்கு வாய்ப்புகள் உள்ளன. பெண் பிள்ளைகளுக்கு இதுவொரு வேடந்தாங்கல்.
நிகழ்விற்குத் தலைமையேற்ற முதல்வர் முனைவர் கே.கிளாடிஸ் அவர்கள், “தமிழ் இலக்கியங்களில் மேலாண்மை குறித்து இத்தனை செய்திகளும் சிந்தனைகளும் திட்டங்களும் இருக்கின்றன என்பதை அறிந்து மிகவும் வியந்து போனேன்; நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை இன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன். இது குறித்து தொடர்ந்து ஆய்வுகளும் திட்டங்களும் வெளிவந்து கொண்டே இருக்க வேண்டும். எங்கள் மாணவியரையும் இவ்வகையில் ஊக்குவிக்க முயற்சி செய்வோம்” என்றார்.