தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடும் புழங்குபொருள்களும்

புழங்குபொருள்கள்

நூல்: தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடும் புழங்குபொருள்களும்

ஆசிரியர் : முனைவர் ஆ.மணவழகன்

 

நூல் அறிமுகம்

பழந்தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்கள் குறித்தும் தொழிற்குடியினர் குறித்தும் சங்க இலக்கியங்கள் முதலான செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தொன்மையும் தனித்தன்மையும் கொண்டுள்ள தமிழ்ச் சமூகத்தில் தொழிற் குடிகளின் சமூகப் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததென்பதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.

உழவுக் குடி, நெசவுக் குடி, தச்சர் குடி, கொல்லர் குடி, குயவர் குடி எனத் தொழில்முறையால் அடையாளப்படும் இவர்களின் வாழ்வியல், சமூக ஓட்டத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. இவர்களின் வாழ்வியலும் தொழிலும் தமிழ்ச் சமூக மரபின் தொடர்ச்சியாகவும் அதேவேளையில், புதுமைகளின் புகலிடமாகவும் திகழ்கின்றன. இக்குடிகளின் பண்டைக் காலப் புழங்குபொருள்களே தமிழர்களின் தொன்மை நாகரிகத்தையும் பண்பாட்டையும் இன்றும் அடையாளப்படுத்துவனவாக விளங்குகின்றன. ஆயினும், இன்றையச் சூழலில், இவர்களின் தொழில்களில் புகுத்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்களால் தொழில்சார் புழங்கு பொருள்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றன.

தொழிற்குடிகள், நவீனத்தின் தாக்குதலால் தங்களின் பல்வேறு அடையாளங்களை இழந்து காணப்பட்டாலும், தொழில்முறைச் சடங்குகளை நம்பிக்கையின் அடிப்படையில் இன்றும் மேற்கொண்டு வருவதைக் காணமுடிகிறது. நாளுக்குநாள் அழிந்தும் மாற்றம்கண்டும் வரும் தமிழக மரபுத் தொழில்களின் எச்சங்களாகவே தொழில்சார் புழங்குபொருள்களும் அவைசார்ந்த சடங்குகளும் இன்று காணப்படுகின்றன. ‘இன்று காணப்படுபவை நாளை இல்லை’ என்ற சூழலில் தொழிற்குடிகளின் தொழிற்சார் புழங்குபொருள்களையும் சடங்குகளையும் உரிய முறையில் அடையாளம் காண்பதும் ஆவணப்படுத்துவதும் தேவையாகிறது.

அவ்வகையில், ‘தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடும் புழங்குபொருள்களும்’ என்ற இந்நூய்வு நூல், தமிழரின் மரபுத் தொழில்களாக அடையாளப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மேற்கொள்ளப்படும் தொழில்களின் தொன்மைச் சிறப்புகள், தொழில்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிவது, தொழில்சார் புழங்குபொருள்களை ஆவணப்படுத்துவது, தொழில்சார் சடங்கியல்களையும் பண்பாடுகளையும் வெளிக்கொணர்வது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது.

அந்த வகையில், பழங்காலந்தொட்டு இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் தொழில்களான வேளாண்மை, நெசவு, மீன்பிடி, தச்சு, கொல்லு, குயவு, சுடுமண் அட்டிகை (செங்கற் சூளை), உப்பளத் தொழில் ஆகிய தொழில்களும் தொழில்நிலைகளும் இந்நூலிற்குக் களங்களாக அமைகின்றன.

பொருளடக்கம்

  1. வேளாண்மைத் தொழில்

(தொன்மை – நுட்பங்கள் – சடங்குகள் – புழங்குபொருள்கள்)

  1. மீன்பிடித் தொழில்

(தொழில்நிலை – சடங்குகள் – புழங்குபொருள்கள்)

  1. மட்பாண்டத் தொழில்

(தொன்மை – தொழில்நிலை – புழங்குபொருள்கள்)

  1. நெசவுத் தொழில்

(தொன்மை – தொழில்நுட்பம் – புழங்குபொருள்கள்)

  1. கொல்லுத் தொழில்

(தொன்மை – தொழில்நிலை – புழங்குபொருள்கள்)

  1. தச்சுத் தொழில்

(தொன்மை – தொழில்நிலை – புழங்குபொருள்கள்)

  1. சுடுமண் அட்டிகைத் தொழில் (செங்கற்சூளை)

(தொன்மை – தொழில்நுட்பம் – சடங்குகள் –  புழங்குபொருள்கள்)

  1. உப்பளத் தொழில்

(தொன்மை – தொழில்நிலை  – புழங்குபொருள்கள்)

 

நூல் பெற: முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை 600113.

அலைபேசி: 9789016815

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

error: Content is protected !!